காதல்

நீ பார்த்த முதல் பார்வையும்
என்னை கண்டு நீ உதிர்த்த
மத்தாப்பு சிரிப்பும் நீ பேசிய
மொழி தமிழ்மொழி அழகும்
நீ கனிந்தளித்த முத்துக்களும்
நம் காதலின் அடையாளங்கள் .......
என் இதயத்தில் பதிந்து
சித்தத்தை கலக்கி பெரும்
காதல் வலி தந்து என்னைஉன்
நினைவு வரும்போதெல்லாம்
செயல் இழக்க சைகுதடி
நீ இல்லை என்று போனபின்னும்
நம் காதல் என் மனதைவிட்டு
நீங்கவில்லையடி இப்படியே
உன் நினைவில் நம் காதல்
என் மனதில் இருந்துவிட்டு போகட்டும்
என் மனதில் வேறு ஒருவளுக்கு
இடம் இல்லை என்று என் நெஞ்சம்
சொல்கிறது உறுதியுடன் ............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jan-18, 8:20 am)
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே