காதல்

உடலால் உள்ளத்தால் மனதால்
மதியால் ஒன்றிய காதலரை
ஜாதி மாதங்கள் ஒருநாளும்
பிரித்திட முடியாது , வெறிகொண்டு
மதி இழந்து ஒரு பாவமும் அறியா
இளங் காதலரை பிடித்து
தாக்கி சிதைத்து பெரும் ஆணவத்தில்
ரத்த கூத்தாடினும் , காதலர் உடல்தான்
மாய்ந்திடும் அங்கு , அவர்கள் உயிரோ
அவர்கள் காதலாய் அமரத்துவம் அடைந்தபின்னே
அவர்கள் காதலை எரித்து சாம்பல்
ஆக்கத்தான் முடியுமா இல்லை
கல்லறையில்தான் அடைத்து வைக்க முடியுமா

மனதால் ஒன்றிய காதலரை
ஜாதி மதம்கொண்டு பிரித்திடாதீர்
வாழவிடுங்கள் வாழ்த்தி ஏற்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jan-18, 8:35 am)
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே