முதுமொழிக் காஞ்சி 5

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை. 5

- சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

உடம்பு நோயின்மை இளமையினும் மிக்கசிறப்புடையது..

கருத்து:

பாலியத்தைக் காட்டிலும் உடல் ஆரோக்கியம் மிக்கசிறப்புடையது.

நோயோடு கூடியதாயின் இளமை வேண்டா; நோயில்லையாயின் முதுமையும் அமையும்.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்றது ஒரு மூதுரை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jan-18, 9:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 127

சிறந்த கட்டுரைகள்

மேலே