முதுமொழிக் காஞ்சி 4

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை. 4

சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை: செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை.

(ப-ரை.) வாய்மை உடைமை - உண்மையுடைமை, வண்மையின் - செல்வமுடைமையைக் காட்டிலும், சிறந்தன்று -சிறந்தது.

வண்மையை ஈகையென்று கொள்வதுமாம்.

செல்வத்தால் ஆகும் நன்மையைக் காட்டிலும் வாய்மையால் ஆகும் நன்மை சிறந்தது.

'யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.' 300 வாய்மை, திருக்குறள்

'வளமையிற் சிறந்தன்று' - பாடபேதம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jan-18, 8:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 116

சிறந்த கட்டுரைகள்

மேலே