வண்ண மேனியே

கண்ணே நீ கடக்கும்பாதை
ரோஜா பூத்த தோட்டமே
கனவென்று நினைத்தேன்
என்னை தென்றல் தீண்டாமல்
தீண்டினாய் மெல்ல
விழுந்தேன் உன் மடிமேல்
புன்னகை பூவாக

விழிகள் மூடியும் பேசினோம்
நிலவே என் மடியில்
சாய்ந்தது போல
கறைந்தது மேகம்
சிவந்த உன்இதழ் கண்டு
ஏங்கினேன் நம் இடைவேளை
பிரியாதிருக்க

இளங்காற்றுக்கு ஆடிய கூந்தல்
விரித்தது பூவாசம் கருமேகத்திலே
வெளுத்தது சாயம் எனது
உன் வண்ண மேனியைக் கண்டவுடன்

எழுதியவர் : ப.இளவரசன் (24-Jan-18, 8:34 am)
சேர்த்தது : vasanedy
பார்வை : 79

மேலே