என் உயிரே
என் இரவு எரிந்து
உன் கண்மை ஆனதே
பகல் தவழ்ந்து உன்
மடியில் பிறக்கவே
பற்றிய வெட்கம் சிறிதும் சிதறாமல்
சுற்றிவந்தேன் உன் பாதத்தை
பூபோல் எழுந்த மனம் இங்கு
வாடாது நீ என்னுள் குடியிருக்கும்வரை
காலம் கணிக்கவில்லை நானும்
வேண்டியே கிடைக்கவில்லை நீயும்
இது எதுவரை போகும் என தெரியவில்லை
நான் போகும்வரையில்
உன்னை கைவிடமாட்டேன்