நேர்மையான காவல் துறை

காவல் காரங்க நாங்க
எங்க கதையை கொஞ்சம் கேளுங்க..!
காலம் நேரம் பார்க்கமல்
உங்களை காவல் காப்பது நாங்க..!

கண்ணியம் எங்கள் கண்ணுங்க..!
என்றும் கண்ணீர் சிந்தியது இல்லங்க..!
கவலை எங்களை ஆண்டாலும்
எங்க கடமையை மறந்தது இல்லங்க..!

மழையோ வெயிலோ
மார்கழி குளிரோ
மறைந்து இருந்தது இல்லங்க..!

பகலோ இரவோ
பணியில் ஓய்வோ
படுத்து உறங்க முடியாதுங்க..!

மக்கள் மனதில் நிம்மதி இருக்க
மரத்துபோனது எங்க உடலுங்க..!
விக்கல் தும்மல் எது வந்தாலும்
வீட்டு நினைவுகள் கொல்லுமுங்க..!

பக்கத்திலே வீடு இருந்தாலும்
பண்டிகை கொண்டாட முடியாதுங்க..!
பயமின்றி நீங்க இருக்க
பணியை நாங்க செய்யனுமுங்க..!

சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் உழைக்கிறோமுங்க..!
சங்கம் இயக்கம் ஏதுமில்லாமல்
சத்தியத்தை காக்குரோமுங்க..!

இயற்கை சீற்றம் எதுவந்தாலும்
இமையாய் உங்களை காப்போமுங்க..!
இறைவன் என்பது மனித உருவம்
இந்த காவல்துறையை நம்பிடுங்க..!

போற்றி வணங்க கேட்கவில்லை
தூற்றி பேச வேண்டாமுங்க..!
தூக்கி எரிந்த குப்பை போல
துட்சமாய் எங்களை எண்ணாதிங்க..!

கடலளவு இரக்கமிருந்தாலும்
கையில் ஆயுதம் தூக்குரோமுங்க..!
கடுமையின்றி கனிவு செய்தால்
களவும் கொலையும் பெருகுமுங்க..!

வெள்ளை துணியாய் எங்கள் வேலை
அதில் நல்ல தூய்மையும் இருக்குதுங்க..!
கொஞ்சமாக கரையை பார்த்து
கொடுமை என்று சொல்லாதிங்க..!

லஞ்சம் கொடுத்து பழகிய சிலர்
லட்சனம் பற்றி பேசதிங்க..!
நெஞ்சம் நிமிர்த்தி சொல்லுவோம்
நாங்கள் நேர்மையான காவல்துறை..!

நெஞ்சம் நிமிர்த்தி சொல்லுவோம்
நாங்கள் நேர்மையான காவல்துறை..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (24-Jan-18, 5:34 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 5878

மேலே