கொடி பறக்குது பாருங்கோ

கொடி பறக்குது பாருங்கோ
கொடி பறக்குது பாருங்கோ
குடிமக்கள் கோவணத்தைக் கிழிச்சி
கொடி பறக்குது பாருங்கோ

கொடி பறக்குது பாருங்கோ
கொடி பறக்குது பாருங்கோ
சாகக்கெடப்பவன் சட்டைய கிழிச்சி
கொடி பறக்குது பாருங்கோ

பேருந்து கட்டண
மிச்சத்துல கச்சதச்சி பேஷாபறக்குது பாருங்கோ
பெட்ரோலு வெல
உச்சத்துல கம்பம் ஏறி
ஒசந்து பறக்குது பாருங்கோ

அனிதாவோட இரத்தம்
குடிச்சி அந்தரத்தில்
பறக்குது பாருங்கோ
இத குத்தமுன்னு கொஞ்சம்
சொன்னா குண்டர்
பாயும் பாருங்கோ

கொடி பறக்குது பாருங்கோ
கொடி பறக்குது பாருங்கோ

வரிகட்டி வரிகட்டி வாழ
நாடு வாடகைவீடா ஆச்சி
மொறையிட்டு மொறையிட்டு உசுரு முழுசா தேஞ்சிபோச்சி

கரைவேட்டி சட்டை எல்லாம்
கறை பட் டு போச்சி
பட்டகறை சுத்தஞ்செய்ய ஏழை
இரத்தம் நீரா ஆச்சி

செருப்புத் தைக்கும் நாங்க
எல்லாம் செருப்பாவே தேயணுமா?
உருப்படியா மொளச்சி வந்தா
சுருக்குத் தான் போகணுமா?

கல்வி திட்டத்தை மாத்தாம
ஒலக போட்டிய நடத்துது
புலிகளுக்கு நகத்தை வெட்டி
போருக்கு போக சொல்லுது

கொடி பறக்குது பாருங்கோ
கொடி பறக்குது பாருங்கோ

கொத்து கொத்தா மனுசஉசுரு
செத்து மெதக்குது கடலுல
அழுத கண்ணீர் கடலரொப்ப
உப்பு இல்ல ஒடலுல

வெள்ளையன் ஆட்சியில கூட
சத்தியமா வெள்ளத்துல சாகல
உள்ளவன் வந்த பிறகு
ஒருகல்லு கூட நாட்டல

கொளங்குட்டை ஏரி மறந்து
தண்ணீ குடிபோச்சி பாட்டிலுள்ள
கொழாய்போட்டு உறிஞ்சவன் குமிடிபுடிக்க நாதியில்ல நாட்டுல

குடிதண்ணி கூட வெஷநெடியேற
குடியரச கொண்டாடுறோம் நாங்க
மானம்போல ஓட்ட வித்த
விதிநெனச்சி திண்டாடுறோம்

கொடி பறக்குது பாருங்கோ
கொடி பறக்குது பாருங்கோ

எழுதியவர் : விமுகா (24-Jan-18, 10:21 pm)
சேர்த்தது : விமுகா
பார்வை : 196

மேலே