குடியரசு 69

இந்திய தீபகற்பம் தீபயொளி இயற்றிடும்
தாய் திருநாடு
பண்டைய பாரதம் பண்டைய கலாச்சாரம்
பொங்கி வழியும் திருநாடு
பொருமையும் திறமையும் ஒருங்கிணைத்து
உலகப் பாலம் அமைக்கும் திருநாடு
சமாதானமும் சன்மார்க்கமும் அளித்த
அரும் பெரும் நாடு
அனைத்து மதத்தின் மேன்மையும் மாட்சியும்
போற்றி பணியும் ஆனந்த நாடு
காடுகளும் கழனிகளும் வரைகளும் நதிகளும்
நிறைந்த நாடு
ஆடல் பாடல் நாட்டியம் வீரவிளையாட்டுப்
போட்டிகள் பங்கிடும் நாடு
இலக்கியம் இலக்கணம் வரலாறு விஞ்ஞான
வித்தகம் தழைத்திடும் திருநாடு
யோகம் சாத்திரம் சித்தர்கள்
விண்டவர்கள் தந்த புண்ணிய நாடு
பல்வேறு மொழிகள் பல்வேறு பண்டிகைகள்
பண்புடன் கொண்டாடும் பண்புள்ள நாடு
சீரிய தலைவர்கள் உலகிற்கு
கொடுத்து அமைதி காத்த திருநாடு
ஆதலால் இன்று ஒரு விதி செய்வோம்
நாட்டைக் காக்கும் ராணுவம் மதிப்போம்
சுற்றுப்புற சூழல் அசுத்தம் நீக்கி
சுத்தம் காப்போம்
தொழில்கள் பெருக்கி வரிகள் கட்டி
திருநாட்டின் வளமை சேர்போம்
சாதிச் சண்டைகள் மதக்கலவரம் நீக்கி
ஒன்றெனக் கூடுவோம்
பெண்மை போற்றி வண்மை பெற்று
புதிய சமுதாயம் படைப்போம்
உலகம் ஒன்றெனக் கொண்டு
மக்கள் யாவரையும் ஒன்றென ஈர்போம்
முரசு கொட்டு வாழிய பாரதம் வாழிய மாந்தர்
இந்தியா ஓர் எடுத்துக்காட்டு

எழுதியவர் : ரமணி (26-Jan-18, 3:56 pm)
பார்வை : 67

மேலே