என்ன செய்தாய் -3

சில நேரம் காதல்
கனவுகளை சுமக்க சொல்லி தருகிறது
சில நேரம் காதல்
கனவுகளில் விழித்து அழும் குழந்தையாகிறது

சில நேரம் காதல்
கவிதைகளை காதில் சுகமாக ஓதி செல்கிறது
சில நேரம் காதல்
கடுகளவும் புரியா இலக்கணமாய் மாறி நிற்கிறது

சில நேரம் காதல்
மழை சாரலில் நனையும் குளிர்ச்சியை அணுக்களுக்குள் செலுத்திகிறது
சில நேர்மை காதல்
எரி நெருப்பில் விழுந்த விறகாய் அணுக்கள் துடிக்கிறது

சில நேரம் காதல்
வாழ்க்கையை அழகான சுவர்க்கம் ஆக மாற்றிப்போடுகிறது
சில நேரம் காதல்
வாழ்க்கையே நரகம் என்று சொல்லவும் செய்துவிடுகிறது

சில நேரம் காதல்
நினைவுகளில் நீந்தி மட்டும் வாழ சொல்லித்தருகிறது
சில நேரம் காதல்
நினைவுகளை விட்டு தூரம் ஓடிவிட பிரயாசிக்கிறது

சில நேரம் காதல்
தனிமைகளுக்குள் தொலைந்து போக செய்கிறது
சில நேரம் காதல்
நண்பர்களோடு புலம்புவதிலே நேரத்தை கழிக்கிறது

சில நேரம் காதல்
தன்னந்தனியே சிரித்து சிலிர்க்க செய்கிறது
சில நேரம் காதல்
கூட்டத்தில்கூட தனிமையை மட்டும் துணையாக்கி போகிறது

சில நேரம் காதல்
கண்ணாடியை அழகு பார்த்து கிடக்க சொல்கிறது
சில நேரம் காதல்
கண்ணாடியில் துடைத்த அழுகையை சரிபார்க்கிறது

சில நேரம் காதல்
கன்னங்களை புன்னகையால் அழகு நிலவாக்குகிறது
சில நேரம் காதல்
கண்ணீரை சிந்தி நிலவை கரைத்துப் போடுகிறது

சில நேரம் காதல்
ஆஹா என்ன இது எனக்குள் என்று சிலாகிக்க செய்கிறது
சில நேரம் காதல்
ஐயோ ஏன் இது எனக்கு என்று அழது தீர்க்க செய்கிறது

பெரும் அலைகளுக்குள்
பெரும்பாடுபட்டாலும்
மோதி மோதி
செல்லும் படகாய்
இத்தனையும் கடந்து
உன்னை மட்டும்
தேடி தேடி
வருகிறது என்
மனசு

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (26-Jan-18, 11:28 pm)
பார்வை : 202

மேலே