மறைக்கிறாள்

இந்த காதலை சுமந்து
அலைகிறேன்
அதன் பாரம் கூடிக்கொண்டே
போகிறது
அதனை இறக்கி வைக்கும்
இடம் தெரியும்
அதன் உரிமைக்காரியையும்
தெரியும்
வாங்கிக்கொள்ள மறுத்து
இடத்தை
மாராப்பினாலே
மூடிச் செல்கிறாள்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (26-Jan-18, 11:47 pm)
பார்வை : 370

மேலே