சாயம் போனது - உண்மை சம்பவம்

வேர்வை துளைகளே
வேர்த்துப் போயின

இரத்தம் அனைத்தும்
நீர்த்துப் போயின- அவன்

கையின் சூட்டிலே
கனலாகின்றது கடப்பாரை

நிலத்தடி மின்சார குழிகளைத் தோண்டி நிம்மதியை புதைக்கிறான்

நகரங்களின் சாலையோரம்
நரகமாக நகர்கிறது அவன் வாழ்கை

ஆட்டமும் பாட்டமும் கிடையாது -அனுகனமும்
அவன் கூட்டம் நினைப்பின்றி கிடையாது

அவர்கள் வந்த வழியும் நொந்த கதைகளுமே
வரலாற்றின் வாசற்படியைச் சென்றிருக்கும்

இதோ இறந்த உண்மைகளும்
இறக்காத நினைவுகளும்
.
.
.
.
அது
செழுமையின் செவ்விடம்
பன்னிரண்டு மாதமும்
பாலோடும் தேனாறு

ஆற்றினை அனைத்ததோர் ஊர்
எங்கள் ஊர்

வண்டலும் கரிசலும் கலந்ததோர் மண்
எங்கள் மண்

மனமும் அதன் வளமும் மாறாது
மழையும் வரும் விலைச்சலும் ஏ மாற்றாது

தினம் உழைப்பும்
அதன் களைப்பும்
எங்கள் வாழ்க்கை

சொந்தமும் பந்தமும்
பாசமும் நேசமும்
எங்கள் வழிமுறை

திருவிழாக்களில் தொலைந்தே போகும்
அறுவடைக்காலங்களில் மறந்தே போகும்
எங்கள் துன்பங்கள்

இப்படியாய் இனிமையாய்
ஓய்யாரமாய் ஒடியது வாழ்க்கை

ஏன்னென்று தெரியவில்லை-இந்த
மாற்றமும் புரியவில்லை

மும்மாரி பெய்த மழை
இம் மாரி பொய்த்துபோனது

உலக வெப்பமயமாதலும்
நரக நகரமயமாதலும் காரணமென
பலப்பல காரணங்களை
படித்தோர் சிலர் சோல்ல

புரியாத புதிராய்
தலையாட்டி நின்றோம்..

இம்முறை பொய்த்தாலென்ன
வரும்காலம் வசமாகும் என்றென்னி
வருசம் பல போனது
வாழ்வியலும் மாறியது

பசியும் சேர்ந்தது
பஞ்சத்தால் பல மாண்டது

இறக்க முன்சென்று
இரக்கத்தால் பின் வந்தேன்
போதுமடா சாமியன
போய்விடலாம் வாவென

ஊரொல்லாம் கூட்டிகிட்டு-இப்படி
ஊருரா சுத்துறோம்

நினையாமலே இந்த சாயம் போனது
நீ'ர் இல்லாமல் விவசாயம் போனது

--- கோராத

எழுதியவர் : கோரா.தணிகைமணி (28-Jan-18, 10:45 am)
பார்வை : 407

மேலே