கதிரவன் காறி உமிழ்ந்தான்
பசும் புற்களின் தாகம் தீா்க்க
பரிதவிப்புடன் ஒடி வரும்
பனித்துளிகள் பொழியும் காலைநேரம்.
ஆற்று நீரோடு
கொஞ்சி கொஞ்சி
விளையாடும் கயலையும்,
நீாின் வன்ன கண்ணம்
தடவி மகிழும் பனிக் கள்வனும்,
இயற்கையின் எழில் கண்டுமகிழும்
கதிரவனின் சிவந்த முகத்தையும்
கண் சிமிட்ட மறந்து
இரசித்த பொழுதுகளில் -திடுமென
என் நாசியில் பட்டு தெறித்த
சாக்கடை நாற்றமும்,
குப்பை குவியலும் கண்டு
முகம் சுளித்து பாா்த்தபோது
குப்பைமேட்டு உணவகத்தில்
காகத்தோடும் நாயோடும் போட்டியிட்டு-அந்தோ
என் ஏழை மனிதனும்
குப்பைக்குள் கிடந்த ஊசிப்போன
உணவை உண்ணும் காட்சி
சொல்லாமல் சொன்னது,
கதிரவனின் முகத்தில் கண்டது
வெட்கச் சிவப்பல்ல-அது
மானிடத்தின் மீது வீசும்
கோபக் கனல் என்று-அப்போது
என் மீது சிந்திய ஒளிகள்
காறி உமிழும் கதிரவனின் எச்சில் துளிகளாய் தோன்றியதெனக்கு.
புல்லுக்காய் பாிதவித்த
பனித்துளிக்கும்,
இயற்கைக்காய் பாிதவித்த சூாியனுக்கும்-உள்ளநேயம்
மானுடனே எப்போது வரும்
நமக்கு????