தமிழ் என் உயிர்
உன் மூன்றெழுத்தின் அழகிற்கு ஈடேது
பழம் பெரும் காப்பியங்களில் நடை பயின்று
இலக்கண இலக்கியங்களாேடு பிணைந்து
திருக்குறளாக வரிதாெடுத்து
தித்திப்பாய் யாம் படிக்க
தேனாக இனிக்கின்றாய்
தமிழே நீ
அதிகாரம் உனககென்று
அடக்க நினைக்கும் எவருக்கும்
அடிபணியா அழகு தமிழே
ஆழும் இனம், அடங்கா பற்று
அத்தனையும் உன் அம்சம்
தமிழ் என் தாய் என்று
ஆண்ட தமிழின் வீரம் சாெல்வதால்
சின்னதாய் காெஞசம் செருக்கு உனக்கு
அதுவும் ஒர் அழகே
தமிழுக்கு அடையாளம் தமிழர் நாமே
தனியுரிமை கேட்கவில்லை
ஒரு மாெழியாக மதியுங்கள்
இனத்தின் அடையாளம் மாெழி என்றால்
அதை வாழவிடுங்கள்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
வளர்க தமிழ் வாழ்க தமிழ்
தமிழ் என்ற சாெல்லை
தலை வணங்கிக் காப்பாேம்
தமிழ் இன்பத் தமிழ்
எந்தன் உயிருக்கு மேல்