மௌனத்தின் மறுபக்கம்

யாரிடமும் பேசவில்லை…
மௌனம்
யாரிடமும்
எதையும் சொல்லாமல்
விட்டதில்லை.
கண்களின் அசைவுகளிலும்…
காதுகளின் துடிப்புகளிலும்…
விரல்களின் நலிவுகளிலும்…
பற்கள்பதியும் உதடுகளிலும்…
பலமாகவே புலப்படுகிறது
பலமணி நேர
பேசமுடியாத பாஷைகள்…
மௌனம்
அம்மாவிற்கு ஆதங்கம்
மனைவிக்கு மகிழ்ச்சி
மகளுக்கு குழப்பமாய்
மாறுபட்டுக் காணப்படுகின்றது.
மமதையின் உச்சம்
மௌனத்தில் தெரிகிறது…
ஒன்றும் அறியாதவன்
உறைந்து கிடக்கிறான்
வழிகளின் பார்வை
செவிகளில் விழுந்தன…
நிறைந்து கிடக்கிறது…
ஒற்றை மௌனம்
அர்த்த அகராதியில்
அநேகப் பக்கங்களாய்….

எழுதியவர் : Tamildeva (28-Jan-18, 8:18 pm)
பார்வை : 172

மேலே