பன்ச் பக்கோடா
உன் தட்டில்,
மிச்சமான நெல் மணியாவும்..
காணி நிலத்தின் கண்மணிகள்,
கலங்க வைக்காதே!
பங்கிட்டு உண்..
பண்பாடே உயர்வு!
பகுத்தறிவுடன் வளர்..
பக்குவமாய் வாழ்!
பணம் படைத்தவனுக்கு
கொடுக்க மனமில்லை..
மனம் படைத்தவனுக்கு
கொடுக்க ஒன்றுமில்லை!
ஜான் ஏறினா
முழம் சறுக்குமாம்..
அடப் போங்கடா!
இங்க ஜானுக்கே
வழியக் காணோம்!