அழகின் அழகே
அழகுகளின் அகராதியே
கவிதைகளின் கருவறையே
மலர்களும்
உன்னைப்போன்று
அழகாய் இருப்பதனால்
உன் தலையில் வைத்துக்கொண்டாடுகிறாயோ ...
இல்லை
உங்களில் யார்
பேரழகுயென தெரிந்துக்கொள்வதற்கு
அழகுப்போட்டி நடத்துகின்றாயோ ...
அவ்வாறு எனில்
என்னுயிரின் உயிரே
இந்த மலரல்ல
எந்த மலரும்
உன் முகத்துக்கு முன்னால்
எப்பொழுதும் பின்னால்