இவனொரு முத்துலிங்கம்

ராஜலிங்கம்...

ஒரு கிராமத்தில் பிறந்த
கிராமத்தானுக்கு கிடைக்கும்
அனுபவங்கள் அற்புதமானது...
அஞ்சுகிராமத்தில் பிறந்தானுக்குள்ள
அனுபவங்கள் மிகவும் அற்புதமானது...

பெற்றோர் நினைவைப் போற்றும்
கற்றார்களில் மிக்கார்களில்
இவரும் ஒருவர்...

பொறியியல் இவனுக்கு
ஒன்றும் புதிதல்ல...
அது அவனது அப்பாவிடமிருந்து
ஆரம்பித்தது...

ஆயிரத்து தொள்ளாயிரத்து
எண்பத்திரண்டு எண்பத்தாறு
ஆண்டுகளின் அரசு
பொறியியற் கல்லூரி வளாகம்
இவனால் பெருமை கொண்டது..
பொருநை இல்லமோ
நல்ல பேரு கொண்டது...

புன்னகை அது எந்த சூழலிலும்
இவனது நிரந்தரச் சொத்து...
அதில் இவனுக்கு உண்டு
ஒரு அகங்காரமில்லா கெத்து...

நண்பர்களிடம் எளிமையாய்ப்
பழகுவதில் உள்ளது
இவனது வலிமை...
அன்றைய ராஜாக்கள் அமைத்தனர்
பாலங்களும் சாலைகளும்
அவரவர் அரசாங்க ஆளுகைக்குள்..
இந்த ராஜாவோ இவற்றை அமைக்கிறான்
தமிழக அரசாங்க ஆளுகையையும் தாண்டி...

சோர்வுற்றிருக்கும் போதெல்லாம்
உற்சாகம் கொள்ள
பிகாம்ப்ளக்ஸ் விட்டமின் மாத்திரை
சாப்பிடுவதில்லை நான்...
இவனோடு சற்று உரையாடினாலே போதும்
உற்சாகம் தன்னால்
தொற்றிக் கொள்ளும்...

சூரியனால் சூழ்நிலைகள் மாறும்..
ஆனால் சூழ்நிலைகளால்
சூரியன் என்றும் மாறாது...
இந்த அன்புச்சூரியன்
ராஜலிங்கத்தின் அன்பும் நட்பும்
என்றென்றும் மாறாதது...

மின்மினிப்பூச்சி மனிதர்கள்
தன் தற்காலிக ஒளிர்தலில்
சந்திரனின் ஒளியாய்த்
தன்னைப் பாவிக்கையில்
இந்தச் சந்திரன் தன்னைத்தானே
என்றும் கர்வப்படுத்திக் கொள்வதில்லை...

இவனது அற்புத ஆங்கிலம்..
பாளை சென்ட் சேவியர் பள்ளியில்
படித்த சிறப்பைச் சொல்லும்...
அழகு தமிழ்ப்பேச்சு
கன்னியாகுமரி மாவட்டத்தின்
மகிமை சொல்லும்...
இந்தியாவை முழுமையாய்த்
தெரிந்த இந்தி தெரிந்த
இந்தியன் இவன்...
கன்னடம் இன்னும்
தன் கன்னிப் பருவத்திலே
இந்த காளையுடன்...
மலையாளம் இவனுக்கு
அடல்ட்ஸ் ஒன்லி
'ஏ' ரகம் இல்லை..
எல்லோரும் ரசிக்கும்
'யூ' சர்டிபிகேட் ரகம்...
தெலுங்கோடும் சிறிது
இன்பாட்ச்சுவேஷன் இவனுக்கு உண்டு...
பெங்காளி மொழியியோடு இவனுக்கு
ஒருதலைக் காதல் உண்டென்று
அறிகிறேன் நான்...

சேர்ந்தாரைக் கொல்லும் சினம்
இது வள்ளுவர் வாக்கு...
சேர்ந்தவரையும் சேராதவரையும்
மாண்படையச் செய்யும்
மாண்பினன் இந்த ராஜலிங்கம்...
இது என் வாக்கு...
'தை'யில் பிறந்தான்
சிந்தையில் இருக்கிறான்...
ஆங்கில முதல் மாதத்திலும்
முத்தமிழறிஞர் மூனா கானாவின்
தமிழ் முதல் மாதத்திலும்
பிறந்தோரெல்லாம்
முதன்மையானவர்கள்
என்பதற்கு இவன் சாட்சி...
இதை இந்த அரங்கத்தில்
சொல்ல விரும்புகிறது
என் மனசாட்சி...

அந்தமானில் தெரிந்தது
இவனது ஆர்ப்பாட்டம்...
ஹேவ்லாக் கடற்கரையில்
தெரிந்தது இவனது ஆட்டபாட்டம்...
ஒரு குழந்தையின் குதூகலம்
எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கிறது
இந்த மீசை மனிதனுக்குள்...

ராஜலிங்கம்... வாழ்க பல்லாண்டு
எல்லா வளங்களும் பெற்று...
நீ இருக்கும் இடம்தேடி
நான் அனுப்பும்
பறக்கும் முத்தங்களை
பெற்றுக்கொள் அன்புடன்...
இனிய பிறந்தநாள் 23.1.2018
நல் வாழ்த்துக்கள்...

ராஜலிங்கம்... நீ நட்பில்
மகாலிங்கம்... திறனில்
சுயம்புலிங்கம்...
நேர்த்தியில் ராமலிங்கம்...
அன்பில் அமிர்தலிங்கம்..
எனக்கு அந்தமான் தீவு
இன்பச் சுற்றுலாவில்
கடல் நீராட கால்சட்டை
கொடுத்ததால் நீ ஒரு
தர்மலிங்கம்...
மாநிற அழகில் நீ ஒரு
சுந்தர லிங்கம்...
மொத்தத்தில் நீ ஒரு
முத்தான முத்துலிங்கம்...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
👍🙋🏻‍♂🙏😀🍰🌹🌺🌷

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (29-Jan-18, 12:02 am)
பார்வை : 153

மேலே