எனக்கேனப் பிறந்தவள்
எத்தனையோ ரசித்தேன் ஏகாந்தம் நான் கண்டேன்..அத்தனையும் கவிதையாக்கி கனவில் உலா வந்தேன்.. இத்தனை நானெழுதியும் திருப்தில்லை வாழ்வில்....என் துணை உன்னை எழுத நினைத்தேன் வசந்தம் வாசல் வீசக்கண்டேன்.. காகிதத்தில் பதித்துக்கொண்ட உறவு; நூலொன்றுக்கட்டி நிலைநாட்டிக்கொண்ட உறவு; சாகும்வரை துணைவருவேன் என சாகரநீர்மேல் சத்தியம் செய்த உறவு...மனைவி நீயாகியதால் மனம் விரிவாகியது..தாயாய் நீ மாறியதால் தன்னலம் மறைந்தோடியது...என்னப் பிறவியடி நீ; எங்கோப் பிறந்தாய் என்னுள் கலந்தாய்; எஞ்சி நின்ற அத்தனையும் எனக்காகத் துறந்தாய்; இத்தனைத் தாயும் உள்ளடக்கி விலங்காய் திரிந்த என்னை விலங்குடைத்து மனிதனாக்கினாய். உன்னோடு நானிருக்கும் ஒரு ஒரு நொடிப்பொழுதும் விண்ணோடு வில்தொடுத்து மகிழ்கிறேனடி... மண்ணோடு நான் மங்கிப்போயினும் கண்ணொடுக் காதல் என் கண்மணி உனக்கு மட்டுமே சொந்தம்....