ஆளும் நிலை---எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர் விருத்தம் :


கமலத்தோ டொன்றியசை இலையின் ஆட்டம்
=====கனவுமீது கனல்வீசி உயிரைக் கொன்றும்
சுமையேற்ற ஏழைமனம் துடித்தெ ழுந்தால்
=====துன்புறுத்த ஒளிர்விடுமின் விளக்க ணைத்தும்
உமிநீங்கும் பொன்னரிசி உலையில் வேக
=====ஊனுயிர்மண் புதைவதைவே டிக்கைப் பார்த்தும்
நமன்பாசக் கயிற்றைப்போல் நாட்டைச் சுற்றி
=====நரகம்நோக் கியிழுத்து நகர்த்தல் போன்றே...

எழுதியவர் : இதயம் விஜய் (30-Jan-18, 8:38 pm)
பார்வை : 97

மேலே