ஆளும் கொடுமை---அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் விருத்தம் :
கடும்புழு தியகம் வைத்துக்
*****கவினெழில் புறத்தில் ஏற்றே
இடர்களைந் தெமக்குண் டோர்ஓர்
*****இலாபமென் றலையும் கூட்டம்
வடக்கினில் கமலச் செவ்வாய்
*****மகுடியூ தமருள் கொண்டு
படர்கொடி உருவில் பாம்பாய்ப்
*****பற்றியிங் கசைதல் நன்றோ?...
சுடர்விடும் தமிழின் மேன்மை
*****தொலைந்தழி வரலாற் றுண்மை
தொடர்ந்துயிர் வதைக்கும் திட்டம்
*****துயில்அடை சட்டம் போன்றில்
கடன்ஒழுங் காற்றா துள்ளம்
*****கவலையற் றதிகா ரத்தால்
அடர்வனம் பற்றும் தீப்போல்
*****அழித்தவ னியாள்தல் நன்றோ?...