இறக்கும் இறைவன்---எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர் விருத்தம் :
கண்டுஞ்சும் நேரமற்றுக் காற்றுவீசு தற்போற்
=====கழனிவாழேர் ஓட்டுங் கருத்தவுடற் கொண்டோன்
வெண்மஞ்சின் உள்ளமேற்றோன் வேதனையில் வீழ்ந்தான்
=====வியன்நதிநீர் வற்றிவிதை நெற்கருகி நிற்கத்
தண்ணெஞ்சந் தீக்கனலிற் சாய்ந்துமாயுந் துன்பந்
=====தனிற்றோய்ந்து தேற்றிடவும் யாருமற்று வெந்தும்
மண்டுஞ்ச நஞ்சுண்டும் வாடுபயிர் மேற்றன்
=====மரணத்தைப் போர்த்துதல் மாறுவதிங் கென்றோ?...