வருவாய் இறைவனே---இயல்தரவினைக் கொச்சகக் கலிப்பா

இயல்தரவினைக் கொச்சகக் கலிப்பா :
சாதிக்க ரையானாற் சல்லடையாய்க் காகிதங்கள்
சாதிக்கும் பாதைவந்துஞ் சாக்கடைப் பள்ளத்தில்
ஆதிக்கங் காட்டும் அறந்துறந்தோர் செய்வினையாற்
பாதிக்க வீக்களாய்ப் பட்டென்று வீழ்வதேன்
வீதிக்குள் வாளேந்தி மெய்யுதிரஞ் சொட்டுவதேன்
நீதிக்கூண் டேறியே நிம்மதியும் நீங்குவதேன்
போதிக்க வாவிறையே பூங்குழற் பாய்ந்துவரும்
நாதத்தால் ஓருறவாய் நன்முறை யாக்கிடுவே...