இன்பம் தரும் வாழ்வு---எழுசீர் ஆசிரிய விருத்தம்

எழுசீர் விருத்தம் :
பொருடரும் இன்பம் வேம்பினில் நறுந்தேன்
=====பூசிட இனிக்கும் பண்டம்
மருடரும் மதுவின் சுகம்விசங் குடித்து
=====வாழ்உயிர் நமன்வசஞ் செலுதல்
இருடரும் வினைகள் புரிந்துளம் ஏற்கும்
=====இன்பமும் வாட்டிடுந் தீயே
அருடரும் இறைவன் பொற்பதம் பணிந்தால்
=====அழிவிலா சுகமதைத் தருமே...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
