என் நாட்குறிப்பும் உன் நினைவோடு
என் நாட்குறிப்பின் பக்கங்களை மெதுவாக புரட்டுகிறேன்,...
சற்றே தொலைந்து கிடைத்ததன் சந்தோசத்தை உணர்வதைப் போல..!
உன் உருவத்தை காணாமல்..,
உன் பெயரில் மகிழ்வை உணர்ந்த நொடிகளும்...!
உன்னுடன் உரையாட ஆசைப்படுவதை..,
என் விழிகளும் உன்னுடன் சொல்ல முடியா தருணங்களும்...!
உன் எண்ணங்களில்.., சற்றே தொலைந்திடும்
என் ஞாபகங்களை.., திரும்ப நினைவுறுத்தும் நிலைகளும்..!
உன்னை மட்டுமே நினைக்கும் என் இதயத்தில்..,ஒப்புக்கொள்ள மறுக்கும் கணங்களும்..!
உன் வார்த்தைகளுக்காக வாசகரைப்போல்..,
காத்துக்கொண்டிருக்கும் என் எதிர்பார்ப்புகளும்..!
உன் விமர்சனங்களை கேட்க மட்டுமே நினைத்து.., உறங்காத ஒவ்வொரு இரவுகளும்..!
ஒவ்வொரு நாட்களும் உன் முகம்
காண நினைத்து.., மனதுள் மகிழ்கின்ற மணித்துளிகளும்..!
உன்னை நேரில் சந்திக்க தைரியமற்று ..,
கனவில்காண எண்ணும் பொழுதுகளும்..! .,
இவைகளோடு பயணித்துக்கொண்டு தான் சென்றது.., என் நாட்களும்...!
என்றாலும்..,இது கனவன்று..,இன்று நனவாகிறது..பக்கங்களை புரட்டுகையில்..,
என் நாட்குறிப்பின் பக்கங்கள் உயிர்பெற்றது..!