நீ எனக்கானவன் -4

உன் நினைவுகளோடு
தவித்துக் கொண்டிருப்பது
பிடித்திருக்கிறது
என் தவிப்புகளை
தூரமாய் நின்று
ரசித்து ரசித்து
பார்த்துக் கொண்டிருப்பதால்

உன் நினைவுகளோடு
தனியே நடந்து கொண்டிருப்பது
சுகமாக இருக்கிறது
எப்போதாவது என்
பயணத்தில் நீ வந்து
என்னோடும் என்
காதலோடும் சேர்ந்து
நடைபோட வருவாய்
என்ற நினைப்பில்


உன் நினைவுகளோடு
சிரித்துக்கொண்டிருக்க
தோன்றுகிறது
சிதறும் சிரிப்பு சத்தத்தில்
என்ன சிரிப்பு என்று
என் சிரிப்போடு கலக்க
வரும் உன் குரலுக்காக

உன் நினைவுகளோடு
வெட்கி தலைகுனியும்
தருணங்கள் பிடித்திருக்கிறது
குனியும் என் தலையை
நீ மெல்ல நிமிர்த்தி
முத்தம் ஓன்று தருவாய்
என்ற நினைப்பில்

உன் நினைவுகளோடு
அழுது தீர்க்கவும் தோன்றுகிறது
சிதறும் கண்ணீர்துளியிலும்
சிரித்தபடி உன் முகமே
வந்து நிற்கிறது
என் கண்ணீர் கலைய
புன்னைகள் பூத்து
நகர்கிறாய் நீ

உன் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருப்பது
சுகம்மாயிருக்கிறது

உன் நினைவுகளோடு
வாழ்ந்து முடித்துவிடவும்
தோன்றுகிறது

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (31-Jan-18, 7:59 pm)
பார்வை : 138

மேலே