தேடாயோ

கொஞ்சம் தூரம் கடந்து
நவம்பர் ஐந்து
தேவதை தாமரை கண்கள் மோதியே
காதல் வந்தது ,,அந்த காதல் என்னுள்
மாயம் செய்தது
காற்றை கூட கையில் கொடுத்தது
இருந்தும் அன்று அவளை நெருங்க தடுத்தது
அதனாலோ இன்று சோகம் என்னை சுற்றி
பாடல் அடி உன்னை பற்றி
ஏனோ ?உன்னை பார்த்தேன் பெண்ணே
அன்று கால்கள் முழுவதும் உந்தன் பின்னே
இருந்தும் அந்த நேரம் போதவில்லையே
என் காதல் நானும் சொல்லவில்லையே
மதியம் கழித்து மாலை வந்தது
சைகை மொழியால் மட்டும் பேசிப்பிரிந்தேன்
ஒன்றும் தெரியாமல் கொஞ்சம்
காலம் கடந்து போனது
ஆனாலும் காதலை மறக்கவில்லை
மீண்டும் மாயை மிஞ்சியே
மறக்கமுடியவில்லை
ஐயோ !இத்தோடு நானும் முடித்து கொள்கிறேன்
உன்னத காதலை உணர்ந்து கொண்டேன்
உந்தன் நினைவை உடுத்தி கொண்டேன்
செந்தமிழ் கண்ணே
பைந்தமிழ் பெண்ணே
முத்தமிழ் மண்ணே
உன்னை தேடி நான் வாரேன் இன்றே

எழுதியவர் : கிருஷ் அரி (31-Jan-18, 8:17 pm)
பார்வை : 540

மேலே