பெண்ணின் ஒரு தலை காதல்
சொல்ல முடியாத
துயரத்திலும்
தூக்கம் இல்லாத
இரவுகள்
என்னில் எத்தனையோ...
அதை நீ அறிய வாய்ப்பில்லை
உன்னிடம் சொல்லமுடியாத
எத்தனையோ வலிகள்
எனக்குள் ..அத்தனையும் உனக்காக
என்ற போது
என் மனம்
இன்பம் கண்டது
இப்போதெல்லாம்
நீ நீயாக இல்லை என்ற
போதும்
உன் மேல் வைத்த
பாசத்தால்
நான் உனக்காக
வாழ்கின்றேன்...
எப்போதும் வாழ்வேன்
உனக்காக