இல்வாழ்வில் பேரின்பம்
வயலில் உழைத்து வரப்பினிலே உடல் களைத்து
இல்லம்வரும் மணாளனை இன்முகமாய் அழைத்து
அன்னம் சமைத்து ஆணமும் உடன் குழைத்து
அன்போடு பரிமாறி ஆதரவாய்க் கதை பேசும்
இல்லாள் கிடைப்பதே இல்லறத்தில் பேரின்பம்
ஆக்கம்
அஷ்ரப் அலி

