கனவுகளுடன் காத்திருக்கிறேன்
கனவுகளுடன் காத்திருந்தேன்
உனக்காக ....
நீ வரவில்லை
கவிதைகள் வந்தது ;ஒதுக்கிவிட்டேன் !
காலங்கள் புரண்ட போது
கனவுகளே சுய சரிதையானது
இந்தக் கனவின் கதைக்கு முற்றுப் புள்ளியில்லை
ஏனெனில் நீ வரவில்லை !
கனவுகளுடன் இன்னும் காத்திருக்கிறேன்
உனக்காக ......