அழகனே

கருவறையின் சூட்டை
கண்டேன் அவன் மார்பில்
காதலில் தோற்றேன்
காமன் வைத்த தேர்வில்
அரளிக்குள் விதையாக
அளவற்ற அன்பை ஒழித்துவைத்தேன்
சப்பாத்திக்கள்ளி முள்ளாக
சடலத்தில் மௌனத்தை போதித்தேன்
துடிதுடித்து நோகவைக்கும்
துன்பத்தை துட்சமாக பாவித்தேன்
அழகனே உன்னால்தான்
அகிலத்தைக்கூட சிறிதாக எண்ணினேன்
ஏற்றம் இதுவென்று
ஏணி வைத்து ஏற்றிவிட்டாய்
தடுமாறி நான்விழுந்தேன்
தங்கக் கரம்கொண்டு தாங்கிவிட்டாய் !...