அந்தநாள்

மனதளவில் என்னை
மதிமயக்கிய மன்மதன்
மஞ்சள்பூசி வரச்சொன்னான்
மணவாளனை உரசத்தான்

சோகங்கள் தீண்டினால்
சோகமே சோர்ந்துபோகுமளவு
அளவில்லாது மின்னும்
அவனது முத்துப்பல்லழகு

ஏளனம் செய்தநான்
ஏங்கிப்போனேன் காணத்தான்
ஏக்கத்தை தீர்க்க
ஏகாந்தமாக பூப்பூத்தான்

மல்லிகை மணம்சூடி
மங்கைநான் அவனைநாடி
நானுறங்கும் தாய்மடியாக
நான்கேட்டேன் அவன்மடி !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (2-Feb-18, 5:35 pm)
பார்வை : 98

மேலே