மலர் காதல் தூதுவர்கள் - தேனீ தேவதைகள்

உழைப்பிற்கு புகழ்பெற்ற தேனீக்களே
தம் சற்றும் அயராது உழைப்பது ஏனோ ?
இயற்கை படைத்த ராணியே
நீயே அத்தேன்னிக்கூட்டின் நட்சத்திரம்,
அழகிய பூக்களில் அமர்ந்து
உன் அழகையும் அதிகரித்து கொள்கிறாயே!
மகரந்தங்களை பூக்களுக்கு வரமளிக்கும் தேவைதையே
நீயோ வாழும் வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்
எவ்வாறோ ??????
தானே சுயமாக கட்டிய கூடுகள்
சற்றும் சுயநலமின்றி சேமித்த தேன்,
ஒற்றுமையோடு வாழும் உன் எண்ணம் ,
உயர்ந்த கட்டிடங்களிலும் கிளைகளிலும்
உன் கூடுகள்
உன்னை மற்ற படைப்புகளில் இருந்து மேல்நோக்கி காட்டுகின்றது
அடடே என்னஒரு அறிய படைப்பு நீ!!!!!