காதலுடன் மோதல்

உன்னைப்பார்த்த நாள்முதலாய்
உனக்குள்ளே உறைந்துபோனேன்
வெளியேற முயற்சித்து
வெந்நிலவாக தேய்ந்துபோனேன்
பாதகத்தி என்னை
பாதாளஇதயத்தில் பூட்டிவைத்தாள்
காதலனாக என்னை
காதலெனும் ஏட்டில்வைத்தாள்
இரத்தத்தில் கலந்து
இறுதிவரை உன்னோடுவாழ்வேன்
இல்லையேல் காதலோடுமோதி
இறுதிச்சடங்கை முடித்துக்கொள்வேன் !...
முதற் சிரிப்பே
முத்தம்போல் இனிக்கிறது
அடுத்தபிறவியிலும் மனைவியாகவர
அடியனின் மனம்விரும்புகிறது !...