சீதாமாதவி அவள்...
ஈச்சனாரி
ராஜ்விஜய் நகர்
மூன்றாவது தெருவை
நடந்து கடந்துகொண்டிருக்கிறேன்
மச்சிவீட்டு மாதவியவள்
ஆனால் சீதையாகத்தான்
அழகுற ரசனைமிக வலம்வருவாள்
வாலோடு அல்ல ஜிம்மி
பொமேரியன் நாய்குட்டியோடு
இந்த நொடியை கடந்துவிடலாமென
எடுத்துவைக்கும் மறுஅடியில்
பெருமழை புயல் எலாம்
தென்றலாகி எனை கடத்தும்
கொழுத்தமார்பு மெல்லிய இடை
நந்தவன கூந்தல் பால்நிலா முகம்
சுண்டியிலுக்கும் உதட்டுச்சாயம்
முனுமுனக்கும் இராஜா பாட்டு என
இந்த அந்திமாலை நேரமானது
சற்றுநேரம் என்பால்ய கிசுகிசுவும்
இந்த ஹார்மோன்களின் அடாவடி
தனமும் இன்றைய இரவில் எப்படியாவது
எனை அந்த சீதாமாதவியின் வீட்டுக்கதவை
தட்ட தூண்டும் என்பதே இந்த இரவின்
பெரும் நிகழ்காலம்......
..##சேகுவேரா சுகன்......