முத்தம் தெம்பாச்சு
![](https://eluthu.com/images/loading.gif)
எனக்குப்பிடித்த வண்ணம்
என்னவளின் நெற்றியில்
எப்படியோ சட்டையில்ஒட்டி
என்னை களவாடினாள்
பரந்துவிரிந்த உலகத்தில்
பறக்குதடி உன்கூந்தல்
பலவருஷம் காத்திருந்து
பதியம்வைத்த பொன்னூஞ்சல்
மூக்குத்தி மின்னுது
மூச்சென்னை கொல்லுது
மூழ்கித்தான் போகாதன்னு
மூச்சிரைத்து சொல்லுது
கண்களைக் கண்டாலே
களவுநடக்குதடி தன்னாலே
கண்டுகொள்ளா முடியாமலே
கண்ணைமூடுகிறேன் உன்னாலே
உன்முகம் பாலாச்சு
உதடு கோவைப்பழமாச்சு
உன்கழுத்து செம்பாச்சு
உன்முத்தம் எனக்குதெம்பாச்சு !...