வஞ்சம் செய்வாரோடு
சின்னஞ்சிறு கையளவு நெஞ்சம்
கடுகளவு அன்பை காண பஞ்சம்
கடலளவு வஞ்சம் செய்வாரோடு
வைத்திடல் ஆகாது புக தஞ்சம்
கிலுகிலுப்பையை குலுக்கியே
கூப்பிட்டு கொலையில் உதைக்கும்
வஞ்சம் செய்வாரோடு கொஞ்சம்
எச்சரிக்கையாய் இருப்பது அவசியம்
நல் நெஞ்சங்கள் கிடைக்க பஞ்சமே ஆயினும் அன்பு காட்ட கஞ்சம் செய்திடும் வஞ்சம் செய்வாரோடு
கொஞ்சம் தள்ளியே வாசித்திடுக
இணங்கினால் தானே அவர்
இதயத்தில் இருக்கும் இருளினை
காணலாம் என்பதை விட்டு முகத்தில் அறிக அவரின் அகத்தின் வஞ்சமதை
வணங்கினதால் தானே அவர்
உள்ளத்தில் இருக்கும் வஞ்சம்
அறியலாம் எனபதை விட்டு மொழியில் அறிக புரியும் அவரின் இழிய பொழிவு
•••••••
வஞ்சம் செய்வாரோடு:
ஆபிரகாம் வேளாங்கண்ணி
தினமணி கவிதைமணியில்
எமது கவிதை