காதல் தூறல்---பாடல்---

திருத்தம் செய்த மீள்பதிவு :


பல்லவி :

தூறல் போடும் மேகம் - என்மேனி
தோகை விரித்து ஆடும்...
சாரல் போல மோகம் - இந்நேரம்
தேகம் நனைந்து வாடும்...
செம்பூவின் வாசமோ?... காற்றில் தூதாய் போக
செவ்வண்டு நேசமும் பூவை வந்து சேரும்...
மன்னவன் தேரினில் காதல் கணை வீச
மங்கையின் வாழ்க்கையும் சோலையாக மாறும்......

தூறல்......


சரணம் 1 :

புல்மீது நானும் சின்ன வெண்பனி
விண்ணோடு நீ உறிஞ்சும் செங்கதிரே...
உன்னோடு பேசும் சற்று நேரமும்
உள்ளத்தில் தேன் தெளிக்கும் பொன் வானமும்...
காதல் மோகத்தால் தேகமெங்கும்
நாணம் தீபம் போல் கோலமிடுதே...
வாடை வீசும் உன் பார்வை ஒன்றில்
கோடை ஓடும் வண்ண மாயமிங்கே......

தூறல்......


சரணம் 2 :

கண் அஞ்சல் நீ அனுப்பும் வேளையில்
நெஞ்சுக்குள் ஏழ்சுரங்கள் பாடுமன்றோ...
ஏக்கத்தில் வாடி நிற்கும் பூங்கிளி
உன் நெஞ்சில் சாயுமந்த யோகமென்றோ?...
மேக விதிக்குள் வான வில்லும்
காமன் பாணத்தை சூடிவருதே...
காதல் தீவுக்குள் பாவை உள்ளம்
மோகத் தேனை உண்டு வாழுமிங்கே.......

தூறல்......

எழுதியவர் : இதயம் விஜய் (3-Feb-18, 2:28 pm)
Tanglish : kaadhal thooral
பார்வை : 229

மேலே