என் கன்னியம்மா பத்தரமாத்து தங்கம்
தங்கத்தை உரசிப்பாக்கும்
கல்லு ஒன்னு என் பாட்டனுக்கு
எப்பவோ யாரோ கொடுத்தது ,
என் கையில் வந்து சிக்கிபுட,
'டேய் முத்துக்கறுப்பா , இங்க
கொஞ்சம் வாரியா , இந்த
கல்ல கொஞ்சம் பாரய்யா,
நேத்து வயக் காட்டுல நான்
கண்ட இந்த கருங் கல்லுல,
ஏதோ மஞ்ச நிறத்துல கோடு
தெரியுது பாரு அதுல சின்னய்யா'
தங்கம் இருக்கா ஒரசிப்பாரு ....
என் ஆத்தா சொல்லிப்புட
நானும் உரசி பாத்ததுல
அந்த கல்லுல தங்கம் ஏதுமில்லை
அந்த மஞ்ச கோடெல்லாம் வெறும்
'காக்க பொன்னு ' ஆத்தான்னு
நான் சொல்லி முடிக்க
அங்க வந்து சேந்தா என் கன்னியம்மா
அடி வாடி என் கருங்குயிலே
உன்ன உரசி பாக்குறேன் நீ
தங்கமான்னு , இந்த கல்லுலேதான்
தங்கமில்லேன்னு ஆத்தா நொந்து போயிருக்க
அங்க கொஞ்சம் பாறுப்புள்ள.!!!!!!!!!!!!!!!.......................
அத கேட்டு ஆத்தா ' போடா போடா
போக்கத்தவா, உன் கன்னியம்மா
பத்தரமாத்து தங்கமடா ,அவ என் அண்ணன் மக
எத்தனை தங்கம் கிடைச்சாலும்
இந்த புள்ளபோல 'தங்கம்' உனக்கு கிடைக்காது
என்று என் ஆத்தவே சொல்ல
என்னவ தங்கமுன்னு இப்ப ஒத்துக்கிட்டேன்
இன்னும் உரசிப்பாக்க எதுக்கு கல்லுன்னு
அந்த 'ஆத்தாகிட்ட கொடுத்துப்புட்டேன்.