மானிட சித்தாந்தம்
மானிட சித்தாந்தம்
இயற்கையில்
எல்லாமே இயல்புகள்தான்
நாள் உதிப்பது
இருள் கவிழ்வது
கடல் அலைவது,
காற்று வீசுவது
எதுவுமே மாற்றமில்லை
வாழ்க்கையின் ஓட்டம்
கூட மாற்றமில்லை
எல்லா
ஜீவராசிகளுக்கும்
அசைவம்,சைவம்
இரண்டு வகை
உயிரிகளுக்கும்
இன்று வரை புலி
புல்லையோ
மான் அசைவத்தையோ
உண்பதில்லை
சிறகிருந்தால் பறப்பதற்கும்
இல்லையென்றால்
நடப்பதற்கும்
நீந்துவதற்கும்
மனிதர்கள் மட்டுமே
விதி விலக்கு
எல்லா வகையிலும்
வருமானம் வசதிகள்
இயல்பான
வாழ்க்கையை கூட
மாற்றி விடும்
எல்லாம் இருப்பவனும்
இல்லாதவனும்
இயல்பான வாழ்க்கை
வாழ நினைத்தால்
“அனுபவிக்க” தெரியாதவன்
இந்த சித்தாந்தம்
மனித வர்க்கத்தில்