யார் தவறு
கருவறையில் உள்ள கரு அறியுமா..
மற்றவரிடம் புத்தகம் விற்றால் தான், தான் பள்ளிக்குச் சென்று படிக்க முடியும் என்று?
மற்றவர் உண்ட எச்சில் இலை எடுத்தால் தான் தன்னால் உணவு உண்ண முடியும் என்று?
ஆடம்பரத்திற்கு அழுகும் குழந்தைகளின் மத்தியில்,
அடுத்த வேளை அடிப்படைகாக அடுத்தவரிடம் வேலை பார்க்க வேண்டும் என்று??
இது கருவறையில் உள்ள கருவின் தவறா??..
கருவிற்கு உயிரை ஊற்றிய தந்தையும் , அக்கருவை சுமந்த தாயும் சிந்திக்காமல் செய்த தவறு..