கடவுளின் குழந்தை

குடைகள் எங்கோ
காற்றோடு...!

இனி மழையில் நனைவதாய்
ஏற்பாடு...!

அஞ்சும் பத்தும்
சில நாள்...!

வயிற்றுக்கு என்றும்
கரி நாள்...!

பெற்றோரைப் பறித்தது
ஒருவன்...!

பெற்ற வரை போதாமல்
ஒளித்தது ஒருவன்...!

இருக்குமிடத்திலிருந்து
இல்லாததை மட்டும்
எடுத்து வந்த சிறுவன்...!

உண்மையில் இங்கு
யார் தான் திருடன் ???

எழுதியவர் : கவித்ரா (4-Feb-18, 8:22 pm)
பார்வை : 97

மேலே