போர்க்களம்

பசித்தவனுக்கு பசி ஓர்போர்க்களம்

காதலிப்பவனுக்கு காதல் ஒர்போர்க்களம்

சம்சாரிக்கு குடும்பம் ஓர்போர்க்களம்

ரோகிக்கு வாழ்க்கை ஓர்போர்க்களம்

ஆசைக்கு அனுபவம் ஓர்போர்க்களம்

உண்மைக்கு பொய்மை ஓர்போர்க்களம்

நன்மைக்கு தீமை ஓர்போர்க்களம்

உறவுக்கு பிரிவு ஓர்போர்க்களம்

பக்தனுக்கு இறைவன் ஓர்போர்க்களம்

அமைதிக்கு மனம் ஓர்போர்க்களம்

உடலுக்கு உயிர் ஓர்போர்க்களம்

கணவனுக்கு மனைவி ஓர்போர்க்களம்

மனைவிக்கு கணவன் ஓர்போர்க்களம்

இருவருக்கும் பிள்ளைகள் ஓர்போர்க்களம்

இருமையின்நெருக்கத்தில் போர்க்களத்தின் விடியல்

எழுதியவர் : கே.எஸ்.கோணேஸ்வரன் (6-Feb-18, 12:46 pm)
Tanglish : porkkalam
பார்வை : 104

மேலே