நிற வேற்றுமை
நெடுங்காலமாய்த் தொடரும்
நிற வேற்றுமை
ஒரு சமூக அவலம்
பலூனுக்கு
பல நிறமிருந்தும்—அதன்
வண்ணம் பெருமை சேர்க்காது
அதற்குள் இருக்கும்
காற்று தான்—அதை
உயரே பறக்க வைக்கும்
தனித்திறன்
ஒளி வீசுமிடத்தில்
நிறவெறி நுழைய முடியாது
ஒரு உயர்ந்த குணம்
வெளிப்புறத் தோற்றத்தை
புறந்தள்ளி விடும்