நெஞ்சம் வந்த பொன்மலரே---பாடல்---
வண்ணம் கொண்ட வெண்ணிலவே மெட்டில் :
பல்லவி :
நெஞ்சம் வந்த பொன்மலரே
நேசம் தந்து ஆள்வாயோ?...
நெஞ்சம் வந்த பொன்மலரே
நேசம் தந்து ஆள்வாயோ?...
கண்ணிலே மோகமுண்டு
பக்கம் வர நாணமின்று...
கண்ணிலே மோகமுண்டு
பக்கம் வர நாணமின்று...
நெஞ்சம்...
சரணம் 1 :
மஞ்சத்தின் வாச முல்லை
வேர்வையில் பூப்பதுண்டு
முத்தத்தின் ஈரம் பட்டு
உதட்டுக்கும் காயமுண்டு...
மஞ்சத்தின்...
கட்டி வந்த பட்டவிழ்ந்து
தோற்றத்தில் மாற்றமுண்டு...
காமத்தை அணிந்து கொண்டால்
நாகத்தின் கூடலுண்டு...
கொஞ்சி கொஞ்சி நாமிணைந்தால்
சொர்க்கம் ஒன்றை காண்பதுண்டு...
நெஞ்சம்...
சரணம் 2 :
நெற்றி வைத்த குங்குமத்தின்
சாய்த்தினில் நான் சிவப்பேன்...
சந்தனத்தை தானுதிர்த்து
கன்னக்குழி நீ மணப்பாய்...
நெற்றி...
மூச்சுக் கற்றுத் தீப்பிடிக்கும்
மேனி விட்டு போர் தொடுக்கும்...
நீரில் ஆடும் தாமரையாய்
காமத்தால் நாம் மிதப்போம்...
தாகம் கொஞ்சம் தீர்த்துக் கொண்டே
பூமி விட்டு வான் பறப்போம்...
நெஞ்சம்...