சொல்லாமலே
பெண்ணே
கொல்லாமல் கொல்லும் உன் கண்களில்
சொல்லாமல் சொல்வாயா உன்
காதலை?
நில்லாமல் ஓடுகின்ற என்
இதயமோ
நீ இல்லாமல் வாடுகின்றதே -படு வேதனை
பெண்ணே
என் கவிபாடும் கவித்திறன்கள்
எல்லாம்
உன் துதிபாடவே என்னுள்
வந்ததம்மா
என் மனக்கண்கள் களவாடும்
குணமும் கூட
நீயே
சொல்லாமல் சொல்லித்தந்ததம்மா...
பெண்ணே
உன்னை நெஞ்சோடு பதிய
நினைத்ததெல்லாம்
மண்ணோடு மண்ணாகி போகுதம்மா
மண்ணுக்குள் புதைந்த எண்ணங்கள் பெருகி
மலையாகி குவிந்தே போகுதம்மா
பெண்ணே!
முகில்கள் தூவும் மழையின் துளிகளில்
அனலின் தோற்றம் நாம்
கண்டதுண்டா?
பின் ஏனடி
அகிலம் பூக்கும் காதல் இதழ்களில்
கனலினைத் தொடர்ந்து தூவுகிறாய்???
அ.ஜீசஸ் பிரபாகரன்

