இதுவும் வாழ்வியல் -கங்கைமணி

வாய்வார்த்தை கொடியது
வாழ்த்தும்போதே வையும்..,ஜாக்கிரதை!

வாயை அடக்கினால் வாழலாம்
மனதை அடக்கினால் வெல்லலாம்..,யோசி !

கவலை...
கண்ணீர் கரை உடைக்கும்
கயிறு கொண்டு காலை கட்டும்
கோழை ஊருக்கு சாலைபோடும்.

நம்பிக்கை...,
இது இல்லாமல் கைகளிருந்தும் பயனில்லை.

அவமானத்தை,
அணிகலன்களாக கொள்ளாதே
அடித்தளமாக்கிக்கொள்.

படிப்பு பள்ளிக்கூடத்தில் விளங்காது
படும்போதுதான் விளங்கும்.

அதிர்ஷ்டம் உழைப்பவர் பக்கம்தான் இருக்கும்., மறவாதே!

தோற்பதற்காக யாரும் பிறப்பதில்லை
நீ பிறந்ததே உன் முதல் வெற்றி.

பறவையை பார்ப்பவன்,அதன்
இறக்கையை கவனித்தால் வெற்றியாளன்.

இயலாமை என்பது உனக்கு
இறந்தபின்னே வரவேண்டும்.
இருக்கும்போது வந்தால்,நீ
இறந்ததாக அர்த்தம்.

நீ நினைப்பதை மட்டுமே கொடுக்கிறது உலகு...,கவனி !

எதற்க்கேனும் பாலமாக இரு,
யாருக்கேனும் பாரமாக இருக்காதே !

பணத்தை மட்டுமல்ல,
நேரத்தை வீணாக்குபவனும்..,ஊதாரிதான்.

தலையா போகும் என்று துணிந்துவிட்டால்
நின்று விளையாடுவாய்...,
தொலைந்தோம் என்று சோர்ந்துவிட்டால்
தூக்கத்தையும் தொலைப்பாய்.

உழைப்பை துவங்கும்முன்
ஒழுக்கத்தால்,உன்
எண்ணத்தை கட்டுப்படுத்து.

நெஞ்சில் ஈரமிருந்தால்,உன்
கையில் பணமிருக்காது,ஆனாலும்
மனதில் நிறைவிருக்கும்..,மாறாதே !

தவரைக்கூட சரியாக செய்யாவிட்டால்
தவறும் தவறாகும்..,மறவாதே !

இரவுக்காக நிலவும்
நிலவுக்காக இரவும்
காத்திருப்பதில்லை,
கடமையை செய்ய காத்திருக்காதே!.

கூச்சம்...,
முயற்சியென்னும் முதல்விதையை,
முடக்கிப்போடுவது.., அதை விடு!

உயரத்தை பார்த்து மிரளாதே,அதன் அடி
உன்னருகிலேயே இருக்கிறது

நிதானமாய் யோசி..,ஞானியைப்போல்.
வேகமாய் செயல்படு...,தேனியைப்போல்.
வெல்வது சத்தியம்!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (6-Feb-18, 10:49 pm)
பார்வை : 139

மேலே