வண்ணமில்லா கனவு
கண்கள் உன்னை கண்ட பின்னே,
காதல் இதயத்தில் பூத்தது பெண்ணே,
காலமெல்லாம் உன்னுடன் வாழ
கண்கள் கனவு கண்டது பெண்ணே,
கண்கள் வரையும் ஓவியத்திற்கு
வண்ணம் தீட்ட வந்தாய் என்று நினைத்தேன்
காவியங்கள் கொண்ட காதலை போன்று
நம்காதல் இருக்கும் என்று கனவுகண்டேன்,
ஏனோ உன்னிடம் சொல்ல பயந்தேன்,
எதுவும் புரியமால் தனிமையில் அழுதேன்.
சொல்வதற்குள்
நீ வெகுதூரம் சென்றாய்,
நான் உறக்கம் தொலைத்தேன்,
காலங்கள் கடந்தபின்
நீயோ என்னை பற்றிய எதுவுமில்லா நினைவுகளுடன்,
நானோ உன்னை பற்றிய வண்ணமில்லா கனவுகளுடன் பெண்ணே ….