உனை காணாது நான்
உன்னை காணாத ஒரு பொழுதில்
நான் தரை தட்டிய கப்பலாய் தவித்து
நின்றேன்!
கரை சேர்ந்த திமிங்கலமாய் திணறி
திகைத்தேன்!
தண்ணீர் தப்பி தரை விழுந்த மீனாய்
தத்தளித்தேன்!
மின் கம்பியமர்ந்த காக்கையாய்
கருகி கண்ணீர் விட்டேன்!
சண்டை கொண்ட மாடிரண்டு பூட்டிய
வண்டி சவாரி செய்தவன் ஆனேன்!நான் மீண்டு வருவேனா? நீ மீண்டும் வருவாயா? என் உயிர் மீட்டு தருவாயா?