கிராமத்துப் பெண்கள்

இன்று முதல் நாள்!
அந்த கிராமத்து பெண்
எனக்கு மிக அருகில்!

நாசியை நனைய வைத்த
தேங்காய் எண்ணெய் கலந்த வாசம்
ஈரான் ஈராக்கை வற்றிப் போகச் செய்யும்.
ஆங்கில கலப்படமில்லாத செயற்கைக்கோள்
கண்ட நிலவு அவள் முகம்.

அவளருகில் வெக்கப்பட்டு சிணுங்கிய
தொலைப்பேசி அவளை ஒரு கணம்
என்னை பார்க்க அனுமதி தந்தது!

கணினியின் விசைபலகையை முத்தமிட்ட அவள்
விரல்கள்... அவள் விரலே படாத ஆண்ட்ராய்ட்
அலைபேசியை ஏளனப்படுத்தியது!

அந்த அயல்நாட்டு சந்தையின்
அடிமைக் கூட்டத்தில் -இளையராஜாவின்
தண்ணீர் ஓவியமாய் அவள் மட்டும்!

வைரமுத்துவின் கவிதையில் இன்னும்
பயன்படுத்தா தமிழ் சொல்லாய்
ஆச்சிர்யப்படுத்துகிறாள் என்னை!....

எழுதியவர் : (10-Feb-18, 10:49 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 999

மேலே